டிசம்பர் 21, 2016
அங்கீகரிக்கப்பட்ட ஐந்து வர்த்தக முகவர் வங்கிகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி
அபராதக்கட்டணம் விதிக்கிறது
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999 (FEMA)-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவுறுத்தல்களின்படி உள்ள அறிவிக்கை அளிப்பது சார்ந்த நிபந்தனைகளை மீறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி கீழ்க்கண்ட 5 வங்கிகளுக்கு அபராதக் கட்டணம் விதிக்கிறது. இந்த அபராதத்தொகை குறித்த விவரங்கள் பின்வருமாறு.
வரிசை
எண் |
வங்கியின் பெயர் |
அபராதத்தொகை
ரூ. |
1. |
பேங்க் ஆஃப் அமெரிக்கா |
10,000 |
2. |
பேங்க் ஆஃப் மிட்சுபிஸி |
10,000 |
3. |
டச் பேங்க் |
20,000 |
4. |
தி ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லேண்ட் |
10,000 |
5. |
ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பேங்க் |
10,000 |
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999 (FEMA)-ன் சட்டப்பிரிவு 11 (3)-ன்கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அது அவ்வப்போது வெளியிட்ட அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்கள் / உத்தரவுகளை மீறியதற்காக இந்த வங்கிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பியது. அதற்கு வங்கிகள் எழுத்துப் பூர்வமான பதில்களும், வார்த்தைகளில் விளக்கங்களும் அளித்தன. இந்த நிகழ்வுகளில் உள்ள உண்மைகள், மற்றும் வங்கிகள் இவ்விஷயத்தில் அளித்துள்ள பதில்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உத்தரவு மீறல்கள் நிரூபிக்கப்பட்டதாக முடிவுக்கு வந்து, அபராதம் விதிப்பது அவசியமென்று தீர்மானிக்கப்பட்டது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1604 |