டிசம்பர் 07, 2016
இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் ரொக்க இருப்பு விகிதத் தேவையை (CRR) விலக்கிக்
கொள்கிறது
நவம்பர் 26, 2016 அன்று இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் ரொக்க இருப்புக்கான தேவை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 16, 2016 முதல் நவம்பர் 11, 2016 வரையுள்ள காலகட்டத்தில், பட்டியலிடப்பட்ட வங்கிகளின் நிகர கேட்பு மற்றும் காலப் பொறுப்புகள் அதிகரித்துள்ள அளவில், 100 சதவிகிதம் ரொக்க இருப்பாக இந்திய ரிசர்வ் வங்கி வசம் வைக்கப்படவேண்டும். இது நவம்பர் 26, 2016 முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் (ரூ. 500 மற்றும் ரூ. 1000) சட்டப்படி செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டதையொட்டி நீர்மத்தன்மை அதிகரித்துள்ளது. அதை உள்வாங்கிக் கொள்ளவே இந்த ஏற்பாடு அறிவிக்கப்பட்டது. இது முற்றிலும் தற்காலிகமான ஒன்றாக, டிசம்பர் 09, 2016 அன்றோ அதற்கு முன்னரோ மறுஆய்வு செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தை நிலைப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பத்திரங்கள் வெளியிடுவதற்கான உச்ச வரம்பு ரூ. 6000 பில்லியனாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் ரொக்க இருப்புத் தேவையை டிசம்பர் 10, 2016 அன்று தொடங்கும் இருவார காலத்திலிருந்து விலக்கிக்கொள்வதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ரொக்க இருப்புத் தேவை விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதிகரிக்கக்கூடிய நீர்மத்தன்மையை சந்தை நிலைப்பாட்டு வெளியீடுகள் மற்றும் LAF செயல்பாடுகள் மூலம் எதிர்கொள்ளலாம்.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1443 |