Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (228.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 27/01/2017
தி ஹர்டாய் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், உத்தரப்பிரதேசம் – இந்திய ரிசர்வ் வங்கி அளித்த கட்டுப்பாட்டு உத்தரவுகள் நீட்டிக்கப்படுகிறது

ஜனவரி 27, 2017

தி ஹர்டாய் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், உத்தரப்பிரதேசம் –
இந்திய ரிசர்வ் வங்கி அளித்த கட்டுப்பாட்டு உத்தரவுகள் நீட்டிக்கப்படுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி, தி ஹர்டாய் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், ஹர்டாய்க்கு ஜனவரி 30, 2017 முதல் ஜூலை 29, 2017 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை மறு ஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கின்றது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 35 A (1) கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த கட்டுப்பாட்டு உத்தரவுகள் வெளியிடப்பட்டன. ஜனவரி 23, 2017 தேதியில் வெளியிடப்பட்ட உத்தரவுப்படி மேலும் ஜூலை 29, 2017 வரை உத்தரவுகள் நீட்டிக்கப்படுகின்றது. விரும்பிடும் பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம், மேற்குறிப்பிட்ட ஜனவரி 23, 2017 தேதியில் வெளியிடப்பட்ட உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படவேண்டும்.

இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் நிதிநிலை மேம்பட்டதாக அல்லது மோசமானதாக ஆகிவிட்டதாகக் கருதக் கூடாது. சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொணடுவரக் கருதலாம்.

(அனிருத் ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2020

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்