மார்ச் 07, 2017
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி லிட்., ஆக்ஸிஸ் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளுக்கான மேற்பார்வையியல் கல்லூரி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி லிட்., ஆக்ஸிஸ் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றின் மேற்பார்வை கல்லூரிகளின் (ஒருங்கிணைப்பாளர்கள்) கூட்டங்கள் பிப்ரவரி 22 முதல் 24 வரை நடைபெற்றது. அவற்றை திரு. S.S.முந்த்ரா, இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தொடங்கி வைத்தார். பிப்ரவரி 22 அன்று SBI-யின் 19 பன்னாட்டு வங்கி மேற்பார்வை அதிகாரிகள் சார்பில் 36 பேர் பங்கேற்றனர். பிப்ரவரி 23-ம் தேதியன்று, ஐசிஐசிஐ வங்கியின் சார்பிலும், ஆக்ஸிஸ் வங்கியின் சார்பிலும் முறையே 10, 6 பன்னாட்டு வங்கி மேற்பார்வை அதிகாரிகள் சார்பாக முறையே 16, 10 பேர் பங்கேற்றனர். பிப்ரவரி 24 அன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் 5 பன்னாட்டு வங்கி மேற்பார்வை அதிகாரிகள் சார்பில் 10 பேர் பங்கேற்றனர். SEBI, IRDA, PFRDA ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கூட்டங்களில் கலந்துகொண்டனர். இந்த வங்கிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிதிச் சந்தைகளில் பங்கேற்கும் நிதி செயற்குழுக்களைக் கொண்டவை. அவற்றில் வங்கி வர்த்தகம், முதலீட்டு வங்கியியல், காப்பீடு, ஓய்வூதிய நிதி மேலாண்மை ஆகியவையும் அடங்கும்.
இந்நிகழச்சிகளைத் தொடக்கி வைத்து உரையாற்றினார் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு. S.S.முந்த்ரா. இந்தியாவில் உள்ள பேரியல் பொருளாதார நிலைப்பாடுகள், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுள்ள மேற்பார்வை அணுகுமுறை, சமீபகாலத்தில் இந்திய ரிசர்வ் வங்கி பின்பற்றும் மேற்பார்வை செயல்முறைகள் இணைய (Cyber)குற்றப் பாதுகாப்பு, மேலும் இந்தியாவில் உள்ள வங்கிகளைப் பொறுத்தவரை அடமான சொத்துக்களின் மதிப்பு குறித்த சவால்கள், இன்னபிறவற்றைக் குறித்து அவர் பொதுவாக தமது உரையில் எடுத்துரைத்தார். இத்தகைய மேற்பார்வை கல்லூரிகளின் கூட்டங்களால் மேற்பார்வையாளர்களிடையே பரஸ்பர நம்பிக்கை, நல்லிணக்கம் வளர்ந்திடும் என்றும் அவர் கூறினார்.
திருமதி அருந்ததி பட்டாச்சார்யா, தலைவர் (SBI), திருமதி சந்தா கோச்சர் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ICICI வங்கி லிட்., ஷிகா ஷர்மா, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, ஆக்ஸிஸ் வங்கி, திருமதி.உஷா அனந்தசுப்ரமணியன், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி,பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியோரும் சிறப்புரையாற்றினர். பல்வேறு வங்கிகளின் சார்பில் உபசரிக்கும் மேற்பார்வையாளர்களின் கேள்விக்கும் பதிலளித்தனர்.
இந்திய ரிசர்வ் வங்கியில் ஏற்பட்டுள்ள நெறிமுறை மேற்பார்வை சார்ந்த மாற்றங்கள் மற்ற பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்தளிக்கப்பட்டன. பங்கேற்பாளர்களும், தங்களின் அனுபவங்கள், வருங்காலம் குறித்த பார்வைகள், அயல்நாட்டு வங்கியியலில் மேற்குறிப்பிட்ட வங்கிகள் எதிர்கொள்ளும் மேற்பார்வை பரப்புகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டனர்.
சர்வதேசக் கிளைகளில் செயல்பாடுகள் அதிகம் உடைய 6 முக்கிய வங்கிகளின் (State Bank of India, Bank of Baroda, Bank of India, ICICI Bank Ltd., Axis Bank Ltd. and Punjab National Bank) பன்னாட்டு செயல்பாடுகளுக்காக, மேற்பார்வைக் கல்லூரிகளை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. பரிமாற்றம், ஒருங்கிணைந்த செயல்பாடு, இடர்வரவு குறித்த சரியான புரிந்துணர்வை மேம்படுத்துதல், இவற்றின் வாயிலாக சர்வதேச செயல்பாடுகள் கொண்ட வங்கிகளின் மேற்பார்வையைத் திறம்பட நடத்திட இவை உதவிகரமாக இருக்கும். இத்தகைய கல்லூரிக் கூட்டம் மாற்று ஆண்டுகளில் ஒருமுறை நடைபெறும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2377 |