Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (228.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/03/2017
நவோதயா அர்பன் கூட்டுறவு வங்கி, நாக்பூர், மகாராஷ்டிராவிற்கு அளித்த கட்டுப்பாட்டு உத்தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி திருத்தியமைக்கிறது

மார்ச் 16, 2017

நவோதயா அர்பன் கூட்டுறவு வங்கி, நாக்பூர், மகாராஷ்டிராவிற்கு அளித்த
கட்டுப்பாட்டு உத்தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி திருத்தியமைக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, நவோதயா அர்பன் கூட்டுறவு வங்கி, நாக்பூருக்கு அளித்த கட்டுப்பாட்டு உத்தரவுகளை திருத்தியமைக்கிறது. இவை, மறு ஆய்வுக்கு உட்ட்டு ஜுன் 15, 2017 வரை இந்த உத்தரவுகள் அமலில் இருக்கும். இந்த வங்கி ஏற்கனவே ஜனவரி 15, 2016 முதல் கட்டுப்பாட்டு உத்தரவுகளின் கீழ் இருந்தது.

வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 35 A (1) கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த கட்டுப்பாட்டு உத்தரவுகள் வெளியிடப்பட்டன. விருப்பமுள்ள பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் இந்த உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படவேண்டும்.

இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதக் கூடாது. வங்கியின் நிதிநிலை மேம்படும் வரை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வங்கி வர்த்தகத்தை இந்த வங்கி தொடர்ந்து மேற்கொள்ளும். சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொணடுவரக் கருதலாம்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2468

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்