மார்ச் 21, 2017
ஹரிஹரேஷ்வர் சஹ்காரி வங்கி, வைய், சதாரா மீது
இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, ஹரிஹரேஷ்வர் சஹ்காரி வங்கி, வைய், சதாரா , மீது ரூ. 2.00 லட்சம் அபராதம் விதிக்கிறது. இதனைப் பின்வரும் காரணத்திற்காக விதிக்கிறது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அச் சட்டத்தின் (BR Act 1949 AACS ) சட்டப்பிரிவு எண் 20 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இயக்குநர்களின் சொத்துக்கள் மீது கடன் அளிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை இவ்வங்கி மீறிய காரணத்தால் மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமான பதிலோடு நேரிலும் வந்து விளக்கம் அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் கணிசமான அளவில் உள்ளதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2515
|