ஜனவரி 20, 2017
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் (PMGKDS) 2016- திருத்தி அமைக்கப்பட்டது. இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியோடு கலந்தாலோசித்து டிசம்பர் 16, 2016 தேதியிட்ட அறிவிக்கைஎண் S.O.4061 (E) மூலம் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் (PMGKDS) 2016-ஐ அறிவித்துள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் யோஜனா (PMGKDS) 2016 திட்டத்தின்கீழ், இதுவரை கணக்குக் காட்டப்படாத வருமானத்தை ஏவரேனும் அறிவித்தால், அவர்கள், இந்த திட்டத்தில் அவற்றை டெபாசிட் செய்யலாம். டெபாசிட் தொகை அறிவிக்கப்பட்ட (கணக்குக் காட்டப்படாத) வருமானத்தில், 25 சதவிகிதத்திற்கும் குறையாமல் இருக்கவேண்டும். இந்த டெபாசிட் தொகையை, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் (இந்திய அரசால் குறிப்பிடப்படுகின்ற) டிசம்பர் 17, 2016-லிருந்து (சனிக்கிழமை) மார்ச் 31, 2017 (வெள்ளிக்கிழமை) வரை டெபாசிட் செய்யலாம்.
இது தொடர்பாகத் தெளிவாகத் தெரிவிப்பது என்னவென்றால், PMGKDS 2016 திட்டத்தின்கீழ் கூட்டுறவு வங்கிகள் டெபாசிட் பெறுவதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. அறிவிக்கையின் பாரா 7 பின்வருமாறு திருத்தியமைக்கப்படுகிறது.
7. அங்கீகரிக்கப்பட்ட வங்கிககள் :- பாண்ட் லெட்ஜர் கணக்கு வடிவில் டெபாசிட் செய்ய, விண்ணப்பங்களை கூட்டுறவு வங்கிகள் தவிர, வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949 (பிரிவு 10) பொறுந்தக் கூடிய எந்தவொரு வங்கியும் பெறலாம்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–2017/1956
|