ஏப்ரல் 26, 2017
Dr. பஞ்சாப்ராவ் தேஷ்முக் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட்,
அமராவதி, மஹாராஷ்டிரா மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, Dr. பஞ்சாப்ராவ் தேஷ்முக் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், அமராவதி, மஹாராஷ்டிரா மீது ரூ. 5.00 லட்சம் பண அபராதத்தை விதிக்கிறது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, “உங்கள் வாடிக்கையாளர்களை அறிதல் குறித்த வழிமுறைக”ளைப் பின்பற்றாத காரணத்தால் மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் நிரூபிக்கப்பட்டு, அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2912 |