ஈகோ இந்தியா பைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது |
மார்ச் 21, 2017
ஈகோ இந்தியா பைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மீது
இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, ஈகோ இந்தியா பைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மீது ரூ. 5.00 லட்சம் (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) அபராதம் விதிக்கிறது. இதனைப் பின்வரும் காரணத்திற்காக விதிக்கிறது. பட்டுவாடா மற்றும் தீர்வுமுறைமைகள் சட்டம் 2007 இன் சட்டப்பிரிவு எண் 30இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி அளித்தஅறிவுறுத்தல்களை மீறியதற்காகவும் தவறான அறிக்கை அளித்ததற்காகவும் மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கைகளை கூராய்வு செய்தபின், இது குறித்து விளக்கம் கோரி இந்நிறுவனத்திற்கு அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு இந்நிறுவனம் , எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், நிறுவனத்தின் பதிலையும் கருத்தில் கொண்டதில், அத்துமீறல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2516 | |