ஏப்ரல் 26, 2017
“அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 150-வது நூற்றாண்டு விழா” வை நினைவு
கூறும் வகையில் புதிய ₹ 5 நாணயங்கள் வெளியீடு
இந்திய ரிசர்வ் வங்கி அரசாங்கம் தயாரித்த மேற்குறிப்பிட்ட மதிப்பிலக்க நாணயங்களை விரைவில் புழக்கத்தில் விடுகிறது.
இந்திய அரசு நிதி அமைச்சகம், பொருளாதார விவகாரத்துறை, புதுதில்லியின் பிப்ரவரி 23, 2016 தேதியிட்ட G.S.R.191 (E) எண் கொண்ட அரசிதழில் (அசாதாரண - பகுதி II பிரிவு 3, உப பிரிவு (i)) இந்த நாணயங்களின் வடிவமைப்பு குறித்த விவரங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
வடிவம்:
முன்புறம்:
நாணயத்தின் இப்பகுதியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் மேற்புறத்தில் ‘भारत’ என்று இந்தியிலும் வலப்பக்கம் ‘INDIA’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். சிங்கமுகத்தின் கீழ் பகுதியில் “₹“ என்ற ரூபாய் குறியீடும் மதிப்பிலக்கம் “5” என்பது சர்வதேச எண் அளவிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
பின்புறம்:
நாணயத்தின் மறுபக்கம் “புத்தகத்தில் இருந்து வரும் அலஹாபாத் உயர் நீதிமன்ற கட்டிடத்தின் மையப் பகுதி“-ஐ சித்தரிக்கும் படம் பொறிக்கப்பட்டிருக்கும். “इलाहाबाद उच्चन्यायालय का 150 वां वार्षिकोत्सव“ என்று தேவநாகரியிலும், “150th ANNIVERSARY OF ALLAHABAD HIGH COURT” என்று ஆங்கிலத்திலும் மேற்புறமும் கீழ்ப்புறமும் பொறிக்கப்பட்டிருக்கும். படத்திற்கு வலது புறமும் இடது புறமும் “1866-2016” என்று சர்வதேச எண் அளவில் எழுதப்பட்டிருக்கும்.
2011-ஆம் வருடத்திய இந்திய நாணயச் சட்டத்தின்படி, இந்த நாணயங்கள் செல்லத்தக்கவை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இந்த மதிப்பிலக்க நாணயங்களும் செல்லத்தக்கவையே.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2016-2017/2903
|