ப்ரித்வி கடன் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (பல மாநில), லக்னௌ, அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பொய்யான மற்றும் தவறான வழிகாட்டும் விவரங்கள் |
ஜுன் 14, 2017
ப்ரித்வி கடன் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (பல மாநில), லக்னௌ, அதிகாரப்பூர்வ
வலைதளத்தில் பொய்யான மற்றும் தவறான வழிகாட்டும் விவரங்கள்
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் மேலே குறிப்படப்பட்ட வங்கியானது, அதன் அதிகாரப்பூர்வ http://prithvisociety.com இணையதளத்தில் பொய்யான விவரங்களை வெளியிடுவதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி 08, 2017 தேதியிட்ட LK.DCBS.1391/10.10.016/2016-17- கடிதத்தைத் தவறாக மேற்கோள் காட்டி, பல மாநில ப்ரித்வி கடன் கூட்டுறவு சங்க லிமிடெட்டானது, ப்ரித்வி கூட்டுறவு (பல மாநில) வங்கியாக மாற்றுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி தடையில்லாச் சான்று வழங்கியுள்ளதாக அதன் இணையத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், பல மாநில ப்ரித்வி கடன் கூட்டுறவு சங்க லிமிடெட்டானது ப்ரித்வி கூட்டுறவு (பல மாநில) வங்கியாக மாறத் தடையில்லாச் சான்றிதழை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கவில்லை. மேலும், தவறான அந்த அறிவிப்பை அதன் அதிகாரப் பூரவ இணையதளத்திலிருந்து உடனடியாக நீக்கும்படியும், உண்மை நிலை குறித்து ஒரு மாற்றறிக்கையை வெளியிடும்படியும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தக் கூட்டுறவு சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. சங்கத்தின் இணையதளத்தில் காணப்படும் தவறான தகவல்களுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளது..
(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிகை வெளியீடு – 2016-2017/3376 |
|