ஜூன் 30, 2017
அங்கத்தினர்கள் அல்லாதவர்களிடமிருந்து டெபாசிட்டுகள் பெறும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் குறித்து எச்சரிக்கை
சில கூட்டுறவு சங்கங்கள் / தொடக்க நிலை கூட்டுறவு கடன் சங்கங்கள் அங்கத்தினர்கள் அல்லாதோர் / பெயரளவில் அங்கத்தினர்களாக உள்ளவர்கள் / இணை அங்கத்தினர்கள் ஆகியோரிடமிருந்து டெபாசிட்டுகள் பெறுவது இந்திய ரிசரவ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்)-ன் கீழ் உரிமம் வழங்கப்படவில்லை. மேலும், வங்கி வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அவைகளுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. இத்தகு சங்கங்களில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கு வைப்புக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தால் வழங்கப்படும் காப்பீடு வசதி கிடையாது. பொதுமக்கள் இத்தகு சங்கங்களுடன் பரிவர்த்தனையில் ஈடுபடும்போது எச்சரிக்கை உணர்வுடன் கவனத்தோடு செயல்படும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(அஜித் பிரசாத்) உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/3546
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்