ஜூலை 31, 2017
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்)-ன் பிரிவு 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
தி CKP கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பாய், மஹாராஷ்டிரா
இந்திய ரிசர்வ் வங்கி, தி CKP கூட்டுறவு வங்கி, மும்பாய், மஹாராஷ்டிரா வங்கிக்கு, ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவு எண் UBD. CO. BSD-I/D-34/ 12.22.035/2013-14-ன்படி மே 02, 2014 அன்று வேலை முடிவு நேரத்திலிருந்து கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு, அடுத்தடுத்த கட்டுபாட்டு உத்தரவுகள் விதிக்கப்பட்டன. ஜனவரி 27, 2017 தேதியிட்ட உத்தரவு எண் DCBR. CO. AID. D-27/12.22.035/2016-17-ன்படி, மறு ஆய்வுக்கு உட்பட்டுக் கடைசியாக செய்யப்பட்ட மாற்றம் ஜூலை 31, 2017 வரை செல்லுபடியாகும்.
2. இந்திய ரிசர்வ் வங்கி, மஹாராஷ்டிரா மும்பையிலுள்ள மேற்படி வங்கிக்கு, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 சட்டப்பிரிவு எண் 35 (A), துணைப்பிரிவு (1)-ன்கீழ் சட்டப்பிரிவு எண் 56 உடன் இணைந்து வழங்கப்பட்ட, ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவு எண் UBD. CO. BSD. D-34 / 12.22.035 / 2013-14-ன்படி, விதித்த கட்டுப்பாடுகளின்படி, அவ்வப்போது மாற்றங்களுக்குட்பட்டு ஜூலை 31, 2017-ல் வெளியிட்ட உத்தரவுப்படி, இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 26, 2017 தேதியிட்ட DCBR. CO. AID D-04 / 12.22.035 / 2017-18 உத்தரவின்படி, ஆகஸ்டு 01, 2017-லிருந்து நவம்பர் 30, 2017 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
3. பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் ஜூலை 26, 2017 வெளியிடப்பட்ட உத்தரவுகளின் பிரதி, வங்கி வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும்.
4. இந்திய ரிசர்வ் வங்கியால் பிறப்பிக்கப்பட்ட இந்த நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றத்தை மட்டுமே கருத்தில்கொண்டு, வங்கியின் நிதிநிலைமை மேம்பட்டுவிட்டதென இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துவிட்டதாகக் கருதக்கூடாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2017-18/296 |