ஆகஸ்டு 02, 2017
திருமலா கூட்டுறவுஅர்பன் வங்கி லிட்., ஹைதராபாத்,
தெலங்கானா - அபராதம் விதிக்கப்படுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, திருமலா கூட்டுறவுஅர்பன் வங்கி லிட்., ஹைதராபாத், தெலங்கானா மீது ரூ. 2.00 லட்சம் அபராதம் விதிக்கிறது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பின்வரும் விஷயங்கள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதல்களை இவ்வங்கி மீறிய காரணத்திற்காக விதிக்கிறது
-
கடன்கள் மற்றும் முன்பணம் முதலியவற்றை இயக்குநர்களுக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் வழங்குவது
-
வெளிப்படுத்துதல் விதிமுறைகளும், சட்டப்பூர்வ / பிற கட்டுப்பாடுகளும்
-
கூட்டுறவு அர்பன் வங்கிகளின் இலாபங்களிலிருந்து பொது / தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடைகள் / பங்களிப்புகள் அளித்தல்.
இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை இவ்வங்கிக்கு அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதில், நேரில் வங்கியிடம் கேட்டறிந்தவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-18/331 |