ஆகஸ்டு 31, 2017
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
மராத்தா சஹகாரி வங்கி லிமிடெட், மும்பாய், மஹாராஷ்டிரா இந்திய ரிசர்வ் வங்கி, மராத்தா சஹகாரி வங்கி, மும்பாய், மஹாராஷ்டிரா வங்கிக்கு, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (அனைத்துக் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்), சட்டப்பிரிவு எண் 35 A ன் கருத்தின்படி ஆகஸ்டு 31, 2016 தேதியில் அளித்த உத்தரவில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு,மேலும் ஆறு மாதங்களுக்கு, (அதாவது பிப்ரவரி 28, 2017 வரை) பிப்ரவரி 23, 2017 தேதியிட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகளின் காலத்தை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இந்த உத்தரவின் காலம் ஆகஸ்டு 31, 2017 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு மறுஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, மஹாராஷ்டிரா மும்பையிலுள்ள மேற்குறிப்பிட்ட வங்கிக்கு, பொதுமக்கள்நலன் கருதி இது அவசியம் என்பதில் திருப்திஅடைந்து ஆகஸ்டு 31, 2016 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவின் செயல்பாட்டு கால அளவை நீட்டித்து பிப்ரவரி 23, 2017 தேதியில் திருத்தப்பட்ட உத்தரவை வெளியிட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் பிரிவு 56 உடன் பிரிவு 35A இன் உப பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, 2016 ஆகஸ்ட்31, தேதியிட்ட உத்தரவை, அவ்வப்போது நீட்டித்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 முதல் 2018 பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மேலும் ஆறு மாத காலத்திற்கு மறுஆய்விற்கு உட்பட்டு நீட்டித்து மராத்தா சஹகாரி வங்கியை கட்டுப்பாட்டின்கீழ் வைக்கிறது.
அவ்வப்போது திருத்தப்பட்ட இந்த உத்தரவின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் தொடர்ந்து இருக்கும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2017-18/594 |