செப்டம்பர் 07, 2017
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
ஆழ்வார் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், ஆழ்வார், ராஜஸ்தான் இந்திய ரிசர்வ் வங்கி, ஆழ்வார் அர்பன் கூட்டுறவு வங்கி, ஆழ்வார், ராஜஸ்தான் வங்கிக்கு, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949) -ன் (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்) பிரிவு 35A, (1)-ன் (சட்டப்பிரிவு 56 உடன் சேர்த்துப்படிக்க) கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் நலன்கருதி இந்தவழிகாட்டுதல் உத்தரவின் காலத்தை நீட்டிப்பது அவசியம் என்பதில் திருப்தி அடைந்து, இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 01, 2017 தேதியில் வெளியிட்ட வழிகாட்டுதல் உத்தரவை, மேலும் 6 மாதங்களுக்கு செப்டம்பர் 08, 2017 முதல் மார்ச் 07, 2018 வரை மறு ஆய்வுக்கு உட்பட்டு செப்டம்பர் 01, 2017 தேதியிட்ட உத்தரவு மூலம் நீட்டித்துள்ளது.
அவ்வப்போது திருத்தப்பட்ட இந்த உத்தரவின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் தொடர்ந்து இருக்கும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2017-2018/663 |