Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (257.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 12/09/2017
உ.பி. சிவில் செயலக தொடக்கநிலை கூட்டுறவு வங்கி லிட்., லக்னௌ உத்தரப்பிரதேசம் மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது

செப்டம்பர் 12, 2017

உ.பி. சிவில் செயலக தொடக்கநிலை கூட்டுறவு வங்கி லிட்., லக்னௌ
உத்தரப்பிரதேசம் மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, உ.பி. சிவில் செயலக தொடக்கநிலை கூட்டுறவு வங்கி லிட்., லக்னௌ மீது வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்குறிப்பிட்ட வங்கிக்கு ரூ. 5.00 லட்சம் அபராதம் விதிக்கிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் 27 வது பிரிவின் கீழ், அறிக்கை விவரங்களை தொடர்ந்து சம்ர்ப்பிக்காமல் இருத்தல் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வுகளில் குறிப்பிடப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவை தொடர்பான அறிக்கைகள் சம்ர்ப்பிப்பதில் நியாயமற்ற காலதாமதம் ஆகிய காரணத்தால் மேற்குறிப்பிட்ட வங்கிக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/708

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்