செப்டம்பர் 21, 2017
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும்
பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A)-ன்கீழ் இந்திய ரிசர்வ் வங்கி, நாசிக்
ஜில்லா கிர்னா சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக், மஹாராஷ்டிராவிற்கு
உத்தவுகளை வழங்குகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 08, 2015 தேதியிட்ட உத்தரவின் மூலம் நாசிக் ஜில்லா கிர்னா சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக், மஹாராஷ்டிரா வங்கியை, செப்டம்பர் 09, 2015 அன்று வர்த்தக முடிவிலிருந்து ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தது. மார்ச் 03, 2016, ஆகஸ்டு 25, 2016 மற்றும் மார்ச் 07, 2017 ஆகிய தேதியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களால் இந்த வங்கி, மீதான உத்தரவுகள் ஒவ்வொரு முறையும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், செப்டம்பர் 08, 2015 தேதியிட்ட உத்தரவு, திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் மார்ச் 03, 2016, ஆகஸ்டு 25, 2016 மற்றும் மார்ச் 07, 2017 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்பட்டதை, மேலும் 6 மாதங்களுக்கு செப்டம்பர் 10, 2017 முதல் மார்ச் 09, 2018 வரை, மறு ஆய்வுக்குட்பட்டு செப்டம்பர் 01, 2017 தேதியிட்ட ஆணையின்படி நீட்டித்துள்ளது.
மேலே குறிப்பிட்ட அறிவுறுத்தல்படி, வழிகாட்டுதல் உத்தரவின் பிற நிபந்தனைகள்
மாறாமல் இருக்கும் செப்டம்பர் 01, 2017 தேதியிட்ட உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும்.
மேற்குறிப்பிட்டபடி இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவை நீட்டிப்பதால், வங்கியின் நிதி நிலை முன்னேற்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துவிட்டதாகக் கருதக் கூடாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017–2018/798 |