செப்டம்பர் 22, 2017
ரங்கா ரெட்டி கோபரேடிவ் அர்பன் வங்கி லிட்., ஹைதரபாத்,
தெலங்கானா - அபராதம்
இந்திய ரிசர்வ் வங்கி, ரங்கா ரெட்டி கோபரேடிவ் அர்பன் வங்கி லிட்., ஹைதராபாத், தெலங்கானா மீது ரூ. 1.00 லட்சம் அபராதம் விதிக்கிறது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வெளிப்பாட்டு நெறிமுறைகள் / சட்டரீதியான பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மேற்குறிப்பிடப்பட்ட வங்கி பின்பற்றாத காரணத்தால் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமான பதிலை/ நேரிலும் அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/815 |