செப்டம்பர் 26, 2017
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
ஆர்.எஸ். கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பாய், மஹாராஷ்டிரா
இந்திய ரிசர்வ் வங்கி, ஆர். எஸ். கூட்டுறவு வங்கி, மும்பாய், மஹாராஷ்டிரா வங்கிக்கு, ஜுன் 24, 2015 தேதியில் அளித்த உத்தரவின்படி ஜுன் 26, 2015 அன்று வேலை முடிந்த நேரத்திலிருந்து கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு, அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்தடுத்த உத்தரவுகள் விதிக்கப்பட்டன. மார்ச் 20, 2017-ல் கடைசியாக செய்யப்பட்ட மாற்றம், செப்டம்பர் 25, 2017 வரை மறு ஆய்வுக்கு உட்பட்டு செல்லுபடியாகும்.
இந்திய ரிசர்வ் வங்கி, மஹாராஷ்டிரா மும்பையிலுள்ள ஆர். எஸ். கூட்டுறவு வங்கி லிமிடெட்டுக்கு ஜுன் 24, 2015ல் விதித்த கட்டுப்பாடுகளின்படி, அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு செப்டம்பர் 20, 2017 அன்று வெளியிட்ட உத்தரவுப்படி,மேலும் 4 மாதங்களுக்கு செப்டம்பர் 26, 2017 முதல் ஜனவரி 25, 2018 வரை மறு ஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் செப்டம்பர் 20, 2017 வெளியிடப்பட்ட உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும். இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி மாற்றங்கள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில்கொண்டு வங்கியின் நிதிநிலை மேம்பாட்டதாக கருதக்கூடாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2017-2018/840 |