வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் அக்டோபர் 01, 2017 தொடங்கும் காலாண்டிற்கான சராசரி அடிப்படை விகிதத்தில் வட்டி வசூலிக்க வேண்டும் |
செப்டம்பர் 29, 2017
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்கள்
அக்டோபர் 01, 2017 தொடங்கும் காலாண்டிற்கான சராசரி அடிப்படை
விகிதத்தில் வட்டி வசூலிக்க வேண்டும்
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் தங்கள் கடனாளிகளுக்கு விதிக்கும் வட்டி விகிதம் அக்டோபர் 01, 2017 தொடங்கி வரும் காலாண்டிற்கான அடிப்படை சராசரி வட்டி விகிதம் 9.06 என்று கணக்கிடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 07, 2014 தேதியிட்ட சுற்றறிக்கையில், ஒவ்வொரு காலாண்டின் கடைசி வேலை நாளில், ஐந்து பெரிய வர்த்தக வங்கிகள் விதிக்கும் சராசரி அடிப்படை விகிதம் அறிவிக்கப்பட்டு, அது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் தங்கள் கடனாளிகளிடமிருந்து வசூலிக்கும் வட்டிவிகிதமாக எதிர்வரும் காலாண்டிலிருந்து அமைந்திடும் என அறிவுறுத்தப்படுகிறது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2017-2018/877 |
|