Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (247.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 10/10/2017
தி பாவனா ரிஷி கூட்டுறவுஅர்பன் வங்கி லிட்., ஹைதராபாத், தெலங்கானா - அபராதம் விதிக்கப்படுகிறது

அக்டோபர் 10, 2017

தி பாவனா ரிஷி கூட்டுறவுஅர்பன் வங்கி லிட்., ஹைதராபாத்,
தெலங்கானா - அபராதம் விதிக்கப்படுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி, தி பாவானா கூட்டுறவு அர்பன் வங்கி லிட்., ஹைதராபாத், தெலங்கானா மீது ரூ. 1.00 லட்சம் அபராதம் விதிக்கிறது. இதனைப் பின்வரும் காரணத்திற்காக விதிக்கிறது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வங்கி இயக்குநர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்குக் கடன்களை வழங்குவதில், வரம்பு ஆகியவை குறித்த ஆணைகள் / வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட வங்கி பின்பற்றாத காரணத்தால் மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமாகவும் / நேரிலும் பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து விதித்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/980

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்