Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (247.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 12/10/2017
தி அனந்தப்பூர் கூட்டுறவு டவுன் வங்கி லிட்., அனந்தப்புரமு, ஆந்திரப்பிரதேசம் - அபராதம் விதிக்கப்படுகிறது

அக்டோபர் 12, 2017

தி அனந்தப்பூர் கூட்டுறவு டவுன் வங்கி லிட்., அனந்தப்புரமு,
ஆந்திரப்பிரதேசம் - அபராதம் விதிக்கப்படுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி, தி அனந்தப்பூர் கூட்டுறவு டவுன் வங்கி லிட்., அனந்தப்புரமு, மீது ரூ. 0.50 லட்சம் அபராதம் விதிக்கிறது. இதனைப் பின்வரும் காரணத்திற்காக விதிக்கிறது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வங்கி இயக்குநர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்குக் கடன்களை வழங்குவது குறித்த ரிசர்வ் வங்கியின் ஆணைகள் / வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட வங்கி பின்பற்றாத காரணத்தால், மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதிலையும் நேரில் அளித்தவிளக்கங்களையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/1019

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்