Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (249.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 13/10/2017
HCBL கூட்டுறவு வங்கி லிமிடெட், லக்னௌ, உத்தரப்பிரதேசம் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் உத்தரவை நீட்டிக்கிறது

அக்டோபர் 13, 2017

HCBL கூட்டுறவு வங்கி லிமிடெட், லக்னௌ, உத்தரப்பிரதேசம்
வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் உத்தரவை நீட்டிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, HCBL கூட்டுறவு வங்கி, லக்னௌ, உத்தரப்பிரதேசம் வங்கிக்கு, வழிகாட்டுதல் உத்தரவினை மறுஆய்வுக்கு உட்பட்டு அக்டோபர் 16, 2017 முதல் ஏப்ரல் 15, 2018 வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கிறது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் ஏப்ரல் 10, 2015 தேதியிட்ட வழிகாட்டுதல் உத்தரவு மூலம் இந்திய ரிசர்வ் வங்கி மேற்படி வங்கி மீது ஏப்ரல் 16, 2015 அன்று வேலை நேர முடிவிலிருந்து கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகள் அக்டோபர் 09, 2017 தேதியிட்ட உத்தரவின்படி ஏப்ரல் 15, 2018 வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது. அவ்வப்போது திருத்தப்பட்ட உத்தரவுகளின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும். பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் அக்டோபர் 09, 2017 தேதியிட்ட உத்தரவின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி மாற்றங்கள் செய்ததை மட்டுமே கருத்தில்கொண்டு வங்கியின் நிதிநிலை மேம்பாட்டதாகவோ மோசமடைந்துவிட்டதாகவோ கருதக்கூடாது. இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது சூழ்நிலைக்குத் தகுந்தவாறு உத்தரவுகளை திருத்தியமைக்கும்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிகை வெளியீடு – 2017-2018/1032

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்