இந்திய ரிசர்வ் வங்கி, ஹர்தோய் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், ஹர்தோய், உத்தரப்பிரதேசத்திலுள்ள வங்கியின் உரிமத்தை ரத்து செய்கிறது |
ஆகஸ்டு 31, 2017
இந்திய ரிசர்வ் வங்கி, ஹர்தோய் அர்பன் கூட்டுறவு
வங்கி லிமிடெட், ஹர்தோய், உத்தரப்பிரதேசத்திலுள்ள வங்கியின்
உரிமத்தை ரத்து செய்கிறது உத்தரப்பிரதேசத்தில் ஹர்தோயிலுள்ள ஹர்தோய் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட் வங்கியின் உரிமம் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 22-ன்படி (உடன் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949ன் பிரிவு 56-ஐப் படிக்கவும்) ஆகஸ்டு 11, 2017 தேதியிட்ட உத்தரவின் மூலம் ரத்து செய்யப்படுகிறது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது. இந்த உத்தரவு ஆகஸ்டு 30, 2017 அன்று வேலைநேர முடிவிலிருந்து அமலுக்குவரும்.ஆகவே, இப்போதிலிருந்து, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 5(b) ஷரத்துக்களின்படி வரையறுக்கப்பட்ட வங்கி வர்த்தகம் செய்வது (வைப்புகள் ஏற்றுக்கொள்ளுதல் / திருப்பித்தருதல் உட்பட) என்பது இந்த வங்கியைப் பொறுத்தவரை தடை செய்யப்பட்டுள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2017-18/587 |
|