Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (252.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 11/10/2017
பொதுத்துறை வங்கிகள் / நிதி நிறுவனங்களுக்கான இருமொழி / ஹிந்தி உள்ளகப் பத்திரிக்கை போட்டி - (2016-17) – பதிவுகள் வரவேற்கப்படுகின்றன

அக்டோபர் 11, 2017

பொதுத்துறை வங்கிகள் / நிதி நிறுவனங்களுக்கான இருமொழி /
ஹிந்தி உள்ளகப் பத்திரிக்கை போட்டி - (2016-17) – பதிவுகள்
வரவேற்கப்படுகின்றன

ஹிந்தி (ராஜ்பஷா) பயன்பாட்டை ஊக்குவிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு / நிதி நிறுவனங்களுக்கான ஒரு இருமொழி / ஹிந்தி உள்ளகப் பத்திரிகை போட்டியை ரிசர்வ் வங்கி நடத்துகிறது. அனைத்துப் பொதுத் துறை வங்கிகள் / நிதி நிறுவனங்களும், ஏப்ரல் 01, 2016 முதல் மார்ச் 31, 2017 வரை வெளியிடப்படும் இருமொழி / ஹிந்தி ஹவுஸ் மேகசின் ஒவ்வொன்றும் 6 பிரதிகளையும், கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி அதனோடு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஹவுஸ் மேகசின் மதிப்பீட்டுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆட்சிமொழிப்பிரிவானது வெற்றியாளர்களுக்கு கேடயம் / சான்றிதழை வழங்கவுள்ளது.

பதிவுகள் கிடைக்கப்பெறும் கடைசி தேதி நவம்பர் 06, 2017 ஆகும்.

பதிவுகளை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும் –

துணைப் பொதுமேலாளர் – பொறுப்பு
இந்திய ரிசர்வ் வங்கி
ஆட்சி மொழித் துறை
மத்திய அலுவலகம்
C-9, 2வது தளம், பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ்
பாந்த்ரா (கிழக்கு)
மும்பை 400 051

போட்டியில் பங்கேற்க தகுதி விவரங்கள் இணைப்பு-A-இல் கொடுக்கப்பட்டுள்ளன. பதிவுகளை சமர்ப்பிப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட படிவம் இணைப்பு-B-இல் கொடுக்கப்பட்டுள்ளது.

(ஜோஸ் J. கட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-18/999

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்