நவம்பர் 08, 2017
இந்திய ரிசர்வ் வங்கி, தி சிந்த் கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட்,
ஹைதராபாத், தெலங்கானா மீது அபராதம் விதிக்கிறது
வெளிப்பாடு நெறிமுறைகள் மற்றும் சட்டப்பூர்வ / பிற கட்டுப்பாடுகளுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை மீறியதற்காக, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது) பிரிவு 47 A(1)(b) & பிரிவு 46 (4) ஷரத்துகளின் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரங்களின்படி, இந்திய ரிசர்வ் வங்கி, தி சிந்த் கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட், ஹைதராபாத், தெலங்கானா மீது ரூ.0.50 லட்சம் (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) அபராதத்தை விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை, அந்த வங்கியிடம் வெளியிட்டது. அதற்காக அந்த வங்கி, தனது பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த பதிலை ஆராய்ந்து நேரில் விளக்கம் கேட்ட பின்னர், வங்கியின் அத்துமீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.
(அனிருதா D. ஜாதவ்)
உதவி மேலாளர்
PRESS RELEASE: 2017-2018/1276 |