நவம்பர் 15, 2017
வசந்த்தாதா நகரி சஹகாரி வங்கி லிமிடெட், ஓஸ்மானாபாத்,
மஹாராஷ்டிரா வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்
உத்தரவுகளைப் பிறப்பித்தது
இந்திய ரிசர்வ் வங்கி, பொதுநலம் கருதி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது) 1949ன் பிரிவு 35 A-யின் உப பிரிவு (2)-ன் கீழ், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வசந்த்தாதா நகரி சஹகாரி வங்கி லிமிடெட், ஓஸ்மானாபாத், மஹாராஷ்டிரா வங்கிக்கு, நவம்பர் 13, 2017 அன்று வேலை நேர முடிவிலிருந்து ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாடு உத்தரவுகளை விதித்தது. இந்த வழிகாட்டுதல்கள், வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல் / வைப்புகளை திரும்பப் பெறுதல் ஆகியவை குறித்த உச்சவரம்புகள் / சில கட்டுப்பாடுகளை வரையறுக்கின்றன. பொதுமக்கள் விருப்பத்திற்கிணங்க, அவர்கள் பார்வையிடும் வண்ணம் மேற்படி உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம். இந்த வழிகாட்டுதல் உத்தரவு வெளியிடப்பட்டதன் காரணமாக, மேற்படி வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டதாகக் கருதக் கூடாது. அதன் நிதி நிலை முன்னேற்றமடையும் வரை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு வங்கி தனது வர்த்தகத்தைத் தொடர்ந்திடும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2017-2018/1347 |