நவம்பர் 17, 2017
தங்கப்பத்திரங்கள் 2017-18 – வரிசை IX – வெளியீட்டு விலை
இந்திய அரசு அறிவிக்கை எண் F.4(25)-B(W&M)/2017 மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அக்டோபர் 06, 2017 தேதியிட்ட IDMD.CDD.No.929/14.04.050/2017-18, சுற்றறிக்கையின்படி தங்கப் பத்திரங்கள் அக்டோபர் 09, 2017 முதல் டிசம்பர் 27, 2017 வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன்கிழமை வரை வெளியிடப்படும். ஒரு வாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த வாரத்தின் முதல் வணிக நாளில் தீர்வு செய்யப்படும்.
நவம்பர் 20, 2017 முதல் நவம்பர் 22, 2017 வரையுள்ள சந்தா காலத்திற்கான தீர்வு நாள் நவம்பர் 27, 2017 என்று எடுத்துக்கொண்டால், பத்திரத்திற்கான மதிப்பு என்பது பின்வருமாறு தீர்மானிக்கப்படும். சந்தா காலத்திற்கு முந்தைய வாரத்தில் மூன்று வேலை நாட்களுக்குக்கான (நவம்பர் 15, 2017 முதல் நவம்பர் 17, 2017) 999 சுத்தத் தங்கத்தின் வர்த்தக முடிவு விலையின் சாதாரண சராசரி, கிராமுக்கு ரூபாய் 2,964/ - (ரூபாய் இரண்டாயிரத்துத் தொளாயிரத்து அறுபத்து நான்கு மட்டுமே) என்று இந்திய புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் (IBJA) வெளியிட்டதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
இந்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்ததன் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பித்து கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு பத்திரத்திற்கான மதிப்பில் கிராமுக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்க முடிவு செய்துள்ளது. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு, தங்கப் பத்திரத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2,914/- (கிராம் ஒன்றுக்கு ரூபாய் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து பதினான்கு மட்டும்) என்று நிர்ணயிக்கப்படுகிறது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1379 |