டிசம்பர்
19, 2006
புதிய ‘எவர்சில்வர்’
இரண்டு
ரூபாய்
நாணயங்களை
இந்திய
ரிசர்வ்
வங்கி
வெளியிடுகிறது
“வேற்றுமையில்
ஒற்றுமை”
என்னும்
தத்துவத்தை
முன்னுறுத்தி
புதிய ‘எவர்சில்வர்’
இரண்டு
ரூபாய் நாணயங்களை
இந்திய ரிசர்வ்
வங்கி
விரைவிலேயே
புழக்கத்திற்கு
விடும்.
இந்த
நாணயங்கள்
வட்ட
வடிவமாகவும், 27 மில்லி
மீட்டர்
விட்டம்
கொண்டதாகவும்,
17% ‘குரோமிய’
உலோகமும் 83% இரும்பு
உலோகமும்
கலந்தாகவும்
இருக்கும்.
நாணயத்தின்
முகப்பு
மூன்று
பகுதிகளைக்
கொண்டிருக்கிறது.
மத்தியில்
அசோகத்தூணின்
சிங்க
முத்திரை
பொறிக்கப்பட்டிருக்கிறது. அதன்
கீழே ‘சத்தியமேவ
ஜெயதே’
என்றும்
உள்ளது.
மத்திய
பகுதியில் அசோகத்தூண்
சிங்க
முத்திரை
அதில்
சர்வதேச எண்கள்
பாணியில் “2”
பொறிக்கப் பட்டிருக்கிறது
. மேல்
பகுதியில் ‘பாரத்’
என்று
இந்தியிலும் ‘இந்தியா’
என்று
ஆங்கிலத்திலும்
பொறிக்கப்பட்டிருக்கிறது.
கீழ்ப்பகுதியில்
சர்வதேச
எண்கள்
பாணியில்
வருடம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
நாணயத்தின்
பின்புறம், நமது
நாட்டின்
தெளிவான
பண்புநலனான “வேற்றுமையில்
ஒற்றுமை”
நேர்த்தியாக
விளக்கப்பட்டிருக்கிறது. நான்கு
தலைகள்
பொதுவான ஒரே
உடலில் அங்கமாக
இருப்பது
போல் உள்ளது. நான்கு
திசைகளிலிருந்தும்
மக்கள் ஒரு
கொடியில் சங்கமமாகி
ஒரே நாட்டை
பிரதிநிதித்துவப்படுத்துவதாக
அமைந்திருக்கிறது. நாணயத்தின்
மதிப்பை
விரைவாக அறிந்து
கொள்ளும்
வண்ணமும்
அந்த
முத்திரை
அமைந்துள்ளது.
இடது மேல்
பகுதியில் இரண்டு
ரூபாய் என்பது
எழுத்தில்
இந்தியிலும்
ஆங்கிலத்திலும்
பொறிக்கப்பட்டிருக்கிறது.
1906 நாணயச்
சட்டத்தின்படி
இந்த நாணயம்
சட்டப்பூர்வமாக
மாற்றக்கூடியது.
புழக்கத்தில்
இருக்கும்
மற்ற வகை இரண்டு
ரூபாய் நாணயங்களும்
செல்லத்
தக்கவையே.
(P.V.சதானந்தன்)
மேலாளர்.
பத்திரிகை
வெளியீடு: 2006-2007/835
|