நவம்பர் 30, 2017
2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. GFL ஃபைனான்ஸியல்ஸ் இந்தியா லிமிடெட் |
10/2, ராம்கஞ்ச், ஜின்ஸி இந்தூர் 452002 |
B-03.00159 |
ஆகஸ்டு 24, 2002 |
அக்டோபர் 18, 2017 |
2. |
M/s. அழகேந்த்ரன் ஃபைனான்ஸ் லிமிடெட் (தற்பொழுது M/s. சாய் ஜீவதாரா ஃபைனான்ஸ் லிமிடெட்) |
எண் 43-ஈ, இரண்டாவது தளம் புதிய ஆவடி ரோடு கீழ்ப்பாக்கம் சென்னை 600010 |
B-07.00254 |
மே 02, 2005 |
அக்டோபர் 18, 2017 |
சான்றிதழ்களை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1497
|