டிசம்பர் 05, 2017
பிட்காய்ன்ஸ் உட்பட மெய்நிகர் நாணயங்களின் ஆபத்து குறித்து
இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, டிசம்பர் 24, 2013 தேதியில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீடு, மெய்நிகர் நாணயங்களை (VCs) வைத்திருப்பவர்கள், உபயோகிப்பவர்கள் கவனத்தை வேண்டுகின்றது. இந்த வெளியீடானது மெய்நிகர் நாணயங்களைக் கையாளவதில் தொடர்புடைய பொருளாதார, நிதி, செயல்பாடு, சட்ட வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தொடர்பான அபாயங்கள் குறித்து எச்சரிக்கிறது.
பிப்ரவரி 01, 2017 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீடு, இந்திய ரிசர்வ் வங்கி எந்தவொரு நிறுவனம் / கம்பெனிகளுக்கும் எந்த பிட்காயின் அல்லது மெய்நிகர் நாணயம் கையாள்வதில் எந்தவொரு திட்டத்திற்கும் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகாரம் / உரிமம் வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
பல மெய்நிகர் நாணயங்களின் மதிப்பு மற்றும் ஆரம்பகால நாணயச் சலுகைகளின் (ICOs) விரைவான வளர்ச்சியில் கணிசமான இடைவெளிக்குப்பிறகு இந்திய ரிசர்வ் வங்கி முந்தைய பத்திரிக்கை வெளியீடுகளில் தெரிவிக்கப்பட்ட அக்கறைகளை வலியுறுத்துகிறது.
(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/1530 |