செப்டம்பர்
30, 2006
அக்டோபர்
3, 2006 லிருந்து
யுனெடெட்
வெஸ்ட்டர்ன்
வங்கியின்
கிளைகள்,
இந்திய
இன்டஸ்ட்ரியல்
டிவலப்மென்ட்
வங்கியின்
கிளைகளாகச்
செயல்படும்
யுனெடெட்
வெஸ்ட்டர்ன் வங்கி,
இந்திய
இன்டஸ்ட்ரியல்
டிவலப்மென்ட்
வங்கியோடு
இணையும்
திட்டத்திற்கு
மத்திய அரசு
இன்று
ஒப்புதல்
அளித்திருக்கிறது.
அக்டோபர் 3, 2006 முதல்
இந்த இணைப்பு
அமலுக்கு வரும்.
இத்தேதியிலிருந்து
அக்டோபர் 3, 2006
லிருந்து
யுனெடெட்
வெஸ்ட்டர்ன் வங்கியின்
கிளைகள்,
இந்திய
இன்டஸ்ட்ரியல்
டிவலப்மென்ட்
வங்கியின்
கிளைகளாகச்
செயல்படும்.
அக்டோபர்
3, 2006 லிருந்து,
யுனெடெட்
வெஸ்ட்டர்ன் வங்கியின்
டெப்பாசிட்தாரர்கள்
உட்பட
வாடிக்கையாளர்கள்,
இந்திய
இன்டஸ்ட்ரியல்
டிவலப்மென்ட்
வங்கியின் வாடிக்கையாளர்களாகத்
தங்கள்
கணக்குகளை
இயக்கலாம். இந்திய
இன்டஸ்ட்ரியல்
டிவலப்மென்ட்
வங்கி,
யுனெடெட்
வெஸ்ட்டர்ன் வங்கியின்
வாடிக்கையாளர்களுக்கு
வழக்கம் போல்
சேவைகள்
கிடைத்திடுவதை
உறுதி
செய்வதற்கான
தேவையான
ஏற்பாடுகளைச்
செய்துக்கொண்டிருக்கிறது.
இணைப்புத்
திட்டத்தின்படி
இந்திய
இன்டஸ்ட்ரியல்
டிவலப்மென்ட்
வங்கி,
யுனெடெட்
வெஸ்ட்டர்ன் வங்கியின்
முழுவதும்
செலுத்தப்பட்ட
பங்கு ஒன்றுக்கு
ரூ.28/- (ரூபாய்
இருபத்து எட்டு
மட்டும்)
வழங்கும். அன்றைய
தேதியில் யுனெடெட்
வெஸ்ட்டர்ன் வங்கியின்
பதிவு
செய்யப்பட்ட
பங்குதாரர்களுக்கு,
தற்காலிக
ஏற்பாடாக
இத்தொகை
வழங்கப்படும். மேலும்
இத்திட்டத்தின்படி,
யுனெடெட்
வெஸ்ட்டர்ன்
வங்கியின்
சொத்துக்களை
விற்று, அந்த
வங்கி
கொடுக்க
வேண்டிய
பொறுப்புகளுக்கு
வழங்கிவிட்டு
உபரியாக
ஏதேனும் தொகை
இருந்தால்,
அந்த
வங்கியின்
பங்குதாரர்களுக்கு
விகிதாச்சார
அடிப்படையில்
குறிப்பிட்ட
காலத்திற்குப்
பின்னர்
பகிர்ந்தளிக்கப்படும்.
G. ரகுராஜ்
துணைப் பொது
மேலாளர்
பத்திரிகை
வெளியீடு: 2006-2007/462
|