ஜனவரி 04, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு
வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன்படி அனைத்து வழிகாட்டுதல்களையும்
உள்ளடக்கி, அமாநத் கூட்டுறவு வங்கி லிமிடெட், பெங்களூரு வங்கிக்கு
அளிக்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகளை நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்களின் விருப்பத்தில் திருப்தியடைந்து, பொதுமக்களுக்கு தகவல் தரும் வகையில், அமாநத் கூட்டுறவு வங்கி லிமிடெட், பெங்களூரு வங்கிக்கு ஏப்ரல் 1, 2013 தேதியிட்ட வழிகாட்டுதல் உத்தரவின் காலம் (உடன் அடுத்த கட்டளைகளைப் படிக்கவும்) கடைசியாக ஜூன் 29, 2017 தேதியில் நீட்டிக்கப்பட்டதை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, அமாநத் கூட்டுறவு வங்கி லிமிடெட், பெங்களூரு வங்கிக்கு ஏப்ரல் 1, 2013 தேதியிட்ட வழிகாட்டுதல் உத்தரவினை மறுஆய்வுக்கு உட்பட்டு, அவ்வப்போது மாற்றங்கள் செய்து, கடைசியாக ஜனவரி 04, 2018 வரை நீட்டிக்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவினை, ஜனவரி 05, 2018 முதல் ஜூலை 04, 2018 வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
வழிகாட்டுதல் உத்தரவின் மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும்.
இந்த வழிகாட்டுதல் உத்தரவு வெளியிடப்பட்டதன் காரணமாக, மேற்படி வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டதாகக் கருதக் கூடாது. அதன் நிதி நிலை முன்னேற்றமடையும் வரை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, வங்கி தனது வர்த்தகத்தைத் தொடர்ந்திடும். சூழ்நிலைகளைப் பொறுத்து, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2017-2018/1834
|