ஆகஸ்ட்
31, 2006
நட்சத்திர (*)
குறியீட்டு
வரிசை ரூபாய்
நோட்டுகள்
வெளியீடு
இந்திய
ரிசர்வ்
வங்கி
விரைவிலேயே நட்சத்திர
(*) குறியீட்டு
வரிசை ரூபாய்
நோட்டுகள் வெளியிடும்
ரூ.10, 20, 50
மதிப்பு
இலக்கங்களில்
முதலில்
இத்தகைய நோட்டுகள்
வெளியிடப்படும்.
நோட்டின் வரிசை
எண்
பகுதியில்
உள்ள முன்
எழுத்திற்கும்
வரிசை எண்ணுக்கும்
நடுவில்
இத்தகைய நட்சத்திர
(*) குறியீடு
இருப்பதைத்
தவிர, மற்றபடி
இந்த
நோட்டுகள் புழக்கத்திலிருக்கும்
நோட்டுகள்
போலவே இருக்கும். எனவே
ரிசர்வ்
வங்கி வெளியிடும்
நோட்டுகளில்
சிலவற்றில்
முன் எண் எழுத்திற்கும்
வரிசை
எண்ணுக்கும்
நடுவில் நட்சத்திரம்
போட்ட நோட்டுக்கள்
அச்சடிக்கப்படும்.
எந்தெந்த
நோட்டுக்
கட்டுகளில்
இத்தகைய நட்சத்திர
(*) குறியீடுள்ள
நோட்டுகள்
இருக்கிறதோ,
அந்த நோட்டுககட்டின்
வளையங்களில், நட்சத்திர
நோட்டுகள்
இருப்பதன்
வாசகம்
அச்சடிக்கப்பட்டிருக்கும்.
புதிய நோட்டுகள்
நட்சத்திர நோட்டுகளுடன்
சேர்ந்து
வழக்கம் போல்
கட்டு ஒன்றில்
100
இருக்கும். நட்சத்திர
நோட்டுகள் அடியில்
வைக்கப்படும். நட்சத்திர
நோட்டுகள்
சட்டப்படிச்
செல்லதக்கவை;
பொதுமக்கள்
தாராளமாக
இத்தகைய நோட்டுகள்
ஏற்றுக்
கொண்டு
பயன்படுத்தலாம்.
ரிசர்வ்
வங்கி
தற்சமயம்
வெளியிடும்
புதிய நோட்டுகள்
வரிசையாக 1 லிருந்து 100 முடிய
வரிசைக்
கிரம்மாக
கட்டப்படுகிறது.
ஒவ்வொரு
நோட்டும்
அதற்கென்று
தனியே வரிசை
எண்ணையும்
கூடவே முன்
எண்
எழுத்தையும்
கொண்டுள்ளது.
தற்சமயம்
தவறாக அச்சடிக்கப்பட்ட
நோட்டுகள்,
பணம்
அச்சடிக்கும்
அலுவலகத்திலேயே
அதே எண்ணுள்ள
மற்றொரு நல்ல
நோட்டை
வைத்து
அகற்றப்படுகிறது. இத்தகைய
நடைமுறையில்
அதிகச்
செயவும்,
நேரமும் விரயமாகிறது. பல
அலுவலர்களின்
தலையீடும்
தவிர்க்க
இயலாததாகி
விடுகிறது.
நோட்டுகள்
அச்சடிக்கும்
அலுவலகங்களின்
செயல்
திறனைப்
பெருக்கவும்,
செலவுகளைக்
குறைக்கவும்,
செயல்பாட்டினை
உலகத்தரத்திற்கேற்ப
உயர்த்தவும்,
தவறுதலாக அச்சடிக்கப்பட்ட
நோட்டுகளுக்குப்பதிலாக
நட்சத்திர (*)
குறியீட்டுடைய
நோட்டுகளை
அச்சடிக்க
முடிவு
எடுக்கப்
பட்டுள்ளது. 2006-07
ஆண்டிற்கான
ஆண்டுக்
கொள்கை
அறிவிப்பில்
இவ்வருடம்
ஏப்ரலில் இது
அறிவிக்கப்பட்டது.
அல்பனா
கில்லவாலா
தலைமைப்
பொது மேலாளர்
பத்திரிகை
வெளியீடு 2006-2007/307
|