ஜனவரி 05, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி (புதிய) வரிசையில்
10 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, ஆளுநர் டாக்டர் உர்ஜீத் R. பட்டேல் அவர்களின் கையெழுத்துடன் கூடிய, மகாத்மா காந்தி (புதிய) வரிசையில் ரூ 10 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. நோட்டின் பின்புறம் நாட்டின் பாரம்பரியத்தைச் சித்தரிக்கும், கோனார்க்கில் உள்ள சூரியனார் கோவிலைக் கொண்டுள்ளது. நோட்டின் அடிப்படை வர்ணம் சாக்லேட் பிரவுன் ஆகும். இந்த நோட்டுகளின் மற்ற வடிவமைப்புகள், வடிவியல் முறைகள் ஆகியவை ஒட்டுமொத்த வண்ணத் திட்டத்துடன் நோட்டின் இருபுறமும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.
மகாத்மா காந்தி (புதிய) வரிசையில் ரூ 10 மதிப்பிலக்க நோட்டுகள், அதன் வடிவம் மற்றும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு இருக்கும்.
i. வடிவம்
முன்புறம்
பின்புறம்
ii. முக்கிய அம்சங்கள்
முன்புறம்
1. ரூபாய் 10 ன் மதிப்பிலக்கம் இரு புறமும் தெளிவாகக் காணுமாறு(see through register) பதிவு
2. ரூபாய் 10 மதிப்பிலக்க எண் - தேவநாகரியில்
3. நடுவில் மகாத்மா காந்தியின் படம்
4. மைக்ரோ எழுத்துகள் – “RBI”, “भारत” மற்றும் 10
5. பாதுகாப்பு இழையில் 'भारत' மற்றும் “ஆர்.பி.ஐ”,என்பது இடைவெளிகளுடன் பொறிக்கப்பட்டுள்ளது.
6. உத்தரவாதம், ஆளுநரின் கையெழுத்துடன் கூடிய வாக்குறுதி, மகாத்மா காந்தியின் படத்திற்கு வலது நோக்கி RBI சின்னம்
7. வலது புறம் அசோகா தூண் சின்னம்
8. வாட்டர் மார்க்கில் எலக்ட்ரோடைப் (10) மற்றும் மகாத்மா காந்தியின் படம்
9. மேல் இடது புறம் மற்றும் கீழ் வலதுபுறத்தில் சிறிய அளவிலிருந்து பெரிய அளவில் எண்களைக் கொண்டுள்ளது
பின்புறம்
10. நோட்டின் இடது புறம் அச்சடிக்கப்பட்ட வருடம்
11. ஸ்வச்ச பாரத் லோகோவுடன் சுலோகன்
12. மொழிப் பட்டியல்
13. கோனார்க் சூரிய கோவில் மையத்தில்
14. மதிப்பிலக்க எண் 10 தேவநாகரியில்
வங்கி நோட்டின் பரிமாணம் 63 மிமீ x 123 மிமீ இருக்கும்.
(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/1848 |