ஜனவரி 10, 2018
கோமதி நகரிய சஹகாரி வங்கி லிமிடெட், ஜான்பூர் (உத்தரப் பிரதேசம்) –
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்) பிரிவு 35A-ன் வழிகாட்டுதல்களின் கீழ் உள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி, ஜூலை 03, 2017 தேதியிட்ட உத்தரவின் பேரில், கோமதி நகரிய சஹகாரி வங்கி லிமிடெட், ஜான்பூர் (உத்திரப் பிரதேசம்) மீது விதிக்கப்பட்டிருந்த உத்தரவை தளர்த்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வைப்புதாரர்கள், சேமிப்புக் கணக்கின் மொத்த வைப்புத் தொகையிலிருந்து திரும்பப்பெறும் தொகை ரூ.30,000/-க்கு (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்) அதிகமாகாமல் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜூலை 03, 2017 தேதியிட்ட உத்தரவின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் தொடர்ந்து மாறாமல் இருக்கும். மேலும் இவ்வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (அனைத்துக் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்) பிரிவு 35A-ன்படி உள்ள வழிகாட்டுதல்களின் கீழ் ஜூலை 10, 2017 அன்று அலுவலக நேர முடிவு முதல் வைக்கப்படுகிறது. ஜனவரி 08, 2018 தேதியிட்ட உத்தரவின்படி, மேற்படி வழிகாட்டுதல்கள் ஜூலை 10, 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 08, 2018 தேதியிடப்பட்ட உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது.
வைப்புதாரர்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக மேலே குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவில் தளர்வு வழங்கப்பட்டுள்ளதால், இதனை வங்கியின் நிதி நிலைமையில் முன்னேற்றம் அல்லது சரிவு என்று கருதக்கூடாது. சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொண்டுவரக் கருதலாம்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1897 |