ஜனவரி 16, 2018
உத்தரவுகளைத் திரும்பப் பெறுதல் - சூரி பிரெண்ட்ஸ் யூனியன் கோ-ஆபரேடிவ்
வங்கி லிமிடெட், சூரி, மேற்கு வங்காளம்
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A)-ன்கீழ் (சட்டப்பிரிவு எண் 56 உடன்இணைந்து), மார்ச் 28, 2014 தேதியிட்ட உத்தரவின்படி வழிகாட்டுதல்களை சூரி பிரெண்ட்ஸ் யூனியன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சூரி, மேற்கு வங்காளத்திற்கு வழங்கியது. வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அவ்வப்போது திருத்தப்பட்டு, அதன் செயல்பாட்டுக் காலம் கடந்தமுறை ஜுன் 29, 2017 தேதியிட்ட உத்தரவின் மூலம் ஜனவரி 06, 2018 வரை நீட்டிக்கப்பட்டது.
ஆகவே வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A)-ன் உப பிரிவு 2-ன்கீழ் பிரிவு எண் 56 உடன்இணைந்து, இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, சூரி பிரெண்ட்ஸ் யூனியன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சூரி, மேற்கு வங்காளத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 06, 2018 முதல் திரும்பப் பெற்றுக்கொள்கிறது. இருப்பினும், வங்கி செயல்பாட்டு வழிமுறைகளின் கீழ் தொடர்ந்து இருக்கும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1946 |