Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (245.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 24/01/2018
இந்திய ரிசர்வ் வங்கி, நவோதயா அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், நாக்பூர், மஹாராஷ்டிரா வங்கிக்கு வழிகாட்டுதல் உத்தரவுகளை வழங்கியது

ஜனவரி 24, 2018

இந்திய ரிசர்வ் வங்கி, நவோதயா அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், நாக்பூர்,
மஹாராஷ்டிரா வங்கிக்கு வழிகாட்டுதல் உத்தரவுகளை வழங்கியது

இந்திய ரிசர்வ் வங்கி, நவோதயா அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், நாக்பூர், மஹாராஷ்டிரா வங்கிக்கு முன்னர் வழங்கிய வழிகாட்டுதல்களை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. வழிகாட்டுதல்கள் தற்பொழுது ஜூலை 15, 2018 வரை மறு ஆய்வுக்குட்பட்டு செல்லுபடியாகும்.

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A)-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழிகாட்டுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவுகள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் உரிமத்தை ரத்துசெய்துவிட்டதாகக் கருதக்கூடாது. நிதிநிலை மேம்படும்வரை இந்த வங்கி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வங்கி வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொள்ளலாம். சூழ்நிலைக்கேற்ப ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்கள் செய்யக்கருதிடும்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2028

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்