ஜனவரி 25, 2018
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்)
சட்டப்பிரிவு எண் 35 (A)-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி, தி R. S. கோ-ஆபரேடிவ் வங்கி
லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிரா வங்கிக்கு வழிகாட்டுதல் உத்தரவுகளை
வழங்கியது
இந்திய ரிசர்வ் வங்கி, தி R. S. கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிரா வங்கிக்கு ஜுன் 24, 2015 தேதியிட்ட உத்தரவின்படி, ஜுன் 26, 2015 அன்று வங்கியின் வர்த்தகத்தை முடித்த நாளில் வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைத்தது. முன்னர் வழங்கிய வழிகாட்டுதல்களை அவ்வப்போது மாற்றங்கள் செய்து கடைசியாக செப்டம்பர் 20, 2017 தேதியிட்ட உத்தரவின்படி, வழிகாட்டுதல்கள் தற்பொழுது ஜனவரி 25, 2018 வரை மறு ஆய்வுக்குட்பட்டு செல்லுபடியாகும்.
பொதுமக்களின் தகவலுக்காகத் தெரிவிக்கப்படுவது, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A)-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழிகாட்டுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. தி R. S. கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிரா வங்கிக்கு அவ்வப்போது மாற்றங்கள் செய்து கடைசியாக செப்டம்பர் 20, 2017 தேதியிட்ட உத்தரவின்படி, ஜனவரி 25, 2018 வரை நீட்டிக்கப்பட்டிருந்த வழிகாட்டுதல்கள், மேலும் ஆறுமாதங்களுக்கு ஜனவரி 26, 2018 முதல் ஜூலை 25, 2018 வரை ஜனவரி 19, 2018 தேதியிட்ட உத்தரவின்படி மறுஆய்வுக்குட்பட்டு நீட்டிக்கப்படுகிறது.
ஜனவரி 19, 2018 தேதியிட்ட உத்தரவின்படி மேற்கூறப்பட்ட மாற்றங்களுடன் கூடிய நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவுகள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி, மேற்படி வங்கியின் நிதிநிலையில் திருப்தியடைந்ததாகக் கருதக்கூடாது.
(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2033 |