பிப்ரவரி 23, 2018
வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கான குறைதீர்ப்பாளர் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துகிறது
பிப்ரவரி 7, 2018 இன் பணவியல் கொள்கை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி,
இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான (என்.பி.எஃப்.சி) குறைதீர்ப்பாளர் திட்டத்தை பிப்ரவரி 23, 2018 தேதியிட்ட அறிவிப்பின்படி ரிசர்வ் வங்கியில் ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 45-IA இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட என்.பி.எஃப்.சி.க்களுக்கு எதிரான புகார்களைத் தீர்ப்பதற்காக இன்று அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் செலவு இல்லாத மற்றும் விரைவான புகார் தீர்க்கும் செயல் முறையை திட்டத்தின் கீழ் உள்ள NBFC களின் சேவைகளின் குறைபாடு தொடர்புடயவைகளுக்கு வழங்கும். வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கான குறைதீர்ப்பாளரின் அலுவலகங்கள் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் புது தில்லி ஆகிய நான்கு மெட்ரோ மையங்களில் செயல்படும், மற்றும் அந்தந்த மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் புகார்களைக் கையாளும்.
ஆரம்பத்தில் இந்த திட்டம் அனைத்து டெபாசிட் பெறும் NBFC களை உள்ளடக்கும். பெறும் அனுபவ அடிப்படையில், சொத்து அளவு ரூ ஒரு பில்லியன் மற்றும் அதற்கு மேல் உள்ள NBFCக்கு வாடிக்கையாளர் இடைமுகத்துடன் கூடிய திட்டத்தை ரிசர்வ் வங்கி நீட்டிக்கும்.
இந்த திட்டம் ஒரு மேல்முறையீட்டு செயல்முறையை வழங்குகிறது, அதன் கீழ் புகார்தாரர் / என்.பி.எஃப்.சி ஒம்புட்ஸ்மனின் முடிவுக்கு எதிராக மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்யும் வசதி உள்ளது.
முழு திட்ட விவரம் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் கிடைக்கிறது.
ஜோஸ் ஜே. கட்டூர்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2289
|