மார்ச் 06, 2018
பிரமவார்ட் கமர்ஷியல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட்,
கான்பூர், உத்தரப்பிரதேசம் – வழிகாட்டுதல் உத்தரவுகள் கால நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, பிரமவார்ட் கமர்ஸியல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், கான்பூர், உத்தரப்பிரதேசம் வங்கிக்கு, மேலும் நான்கு மாதங்களுக்கு மார்ச் 07, 2018 முதல் ஜூலை 06, 2018 வரை மறு ஆய்வுக்கு உட்பட்டு கால நீட்டிப்பு செய்துள்ளது. மேற்படி வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (அனைத்துக் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பிரிவு 35A இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜுன் 30, 2015 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவின்படி ஜூலை 07, 2015 வரை வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் உள்ளது.
மேற்படி உத்தரவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, செப்டம்பர் 23, 2015, டிசம்பர் 30, 2015, மார்ச் 28, 2016, ஜுன் 30, 2016, டிசம்பர் 30, 2016, ஜுன் 29, 2017 மற்றும் நவம்பர் 01, 2017 தேதியிட்ட உத்தரவுகளின்படி செல்லுபடியாகும் கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக மார்ச் 06, 2018 தேதியில் நீட்டிக்கப்பட்டிருந்த கால அளவை மேலும் நான்கு மாதங்களுக்கு மார்ச் 07, 2018 முதல் ஜூலை 06, 2018 வரை மறு ஆய்வுக்குட்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் தொடர்ந்து இருக்கும். மார்ச் 01, 2018 தேதியிடப்பட்ட உத்தரவின் நகலை பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி, இந்த வங்கியின் நிதிநிலைமையில் தேவையான முன்னேற்றம் அடைந்துள்ளது என திருப்தியடைந்துவிட்டதாகக் கருதக்கூடாது. சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொண்டுவரக் கருதலாம்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2361 |