இந்திய ரிசர்வ் வங்கி, ICICI வங்கி லிமிடெட் மீது அபராதம் விதிக்கிறது |
மார்ச் 29, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, ICICI வங்கி லிமிடெட்
மீது அபராதம் விதிக்கிறது
ICICI வங்கி லிமிடெட் (வங்கி), மீது இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 589 மில்லியன் பண அபராதத்தை, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46(4) (i) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட மார்ச் 26, 2018 தேதியிட்ட உத்தரவின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறி, HTM பங்குப் பத்திரங்களை நேரடியாக விற்பனை செய்ததை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்காத காரணத்திற்காக மேற்படி வங்கிக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை வழிகாட்டுதல் உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதன் வாடிக்கையாளர்களுடன் வங்கியால் நிகழ்த்தப்பட்ட பரிவர்த்தனை அல்லது வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தத்தின் செல்லுபடியையும் குறிப்பிட்டதல்ல.
(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2593 |
|