மே 14, 2018
தி மெஹ்சானா நகர கூட்டுறவு வங்கி லிமிடெட்,
மெஹ்சானா (குஜராத்) மீது அபராதம் விதிக்கிறது
தி மெஹ்சானா நகர கூட்டுறவு வங்கி லிமிடெட், மெஹ்சானா (குஜராத்), இந்திய ரிசர்வ் வங்கி, ரூ. 1.00 கோடி பண அபராதத்தை விதித்துள்ளது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46 (4) (i) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட, அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கிகளுக்கான வழிகாட்டுதல்கள் / அறிவுரைகள் / விதிமுறைகள் ஆகியவற்றை மீறி, வங்கியின் இயக்குநர்களுக்கும் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் முன் பணம் வழங்கியது, உங்களது வாடிக்கையாளரை அறிதல் /பணச்சலவை விதிமுறைகள் மற்றும் குழுக்களின் வெளிப்பாட்டு விதிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றாத காரணத்தால், மேற்படி வங்கிக்கு இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வழங்கியது. வங்கி பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் இது தொடர்பாக வங்கி தனிப்பட்ட முறையில் நேரில் ஆஜராகி அளித்த பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2983 |