Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (478.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 06/06/2018
குப்பம் கோ-ஆபரேடிவ் டவுன் வங்கி லிமிடெட், குப்பம், ஆந்திரப்பிரதேசம் மீது அபராதம் விதிக்கப்படுகிறது

ஜுன் 06, 2018

குப்பம் கோ-ஆபரேடிவ் டவுன் வங்கி லிமிடெட், குப்பம், ஆந்திரப்பிரதேசம்
மீது அபராதம் விதிக்கப்படுகிறது

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46 (4)-ன்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்படி சட்டத்தின் 27 (2)வது பிரிவை மீறிய காரணத்திற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, குப்பம் கோ-ஆபரேடிவ் டவுன் வங்கி லிமிடெட், குப்பம், ஆந்திரப்பிரதேசம் வங்கியின் மீது ரூ. 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பண அபராதத்தை விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வெளியிட்டது. வங்கி எழுத்து மூலமாக பதிலை அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த தனிப்பட்ட பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/3205

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்