ஆதித்ய பிர்லா ஐடியா பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது |
பிப்ரவரி 22, 2018
ஆதித்ய பிர்லா ஐடியா பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட்
செயல்படத் தொடங்கியது
பிப்ரவரி 22, 2018 முதல் ஆதித்ய பிர்லா ஐடியா பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இதன்பொருட்டு, பேமென்ட்ஸ் வங்கியாக இந்தியாவில் செயல்படுவதற்குரிய உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 22 (1)-ன் கீழ் இதற்கு அளித்துள்ளது.
ஆகஸ்டு 19, 2015 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி, பேமென்ட்ஸ் வங்கி அமைப்பதற்குக் கொள்கை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்ட 11 விண்ணப்பதாரர்களில் ஆதித்ய பிர்லா நுவோ லிமிடெட், மும்பையும் ஒன்றாகும்.
(ஆஷிஷ் தர்யானி)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2275
| |