டிசம்பர் 20, 2017
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் (SCBs) வைப்புத்தொகையின் அமைப்பு
மற்றும் உரிமை முறை - மார்ச் 31, 2017
இன்று, இந்தியரிசர்வ் வங்கி மார்ச் 31, 2017 நிலவரப்படி திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளுடன் (எஸ்சிபி) வைப்புத்தொகையின் அமைப்பு மற்றும் உரிமையாளர் முறை குறித்த புள்ளிவிவரங்களை (தரவுகளை) வெளியிட்டது.இன்று, ரிசர்வ் வங்கி மார்ச் 31, 2017 க்கான பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் (SCBs) வைப்புத்தொகையின் அமைப்பு மற்றும் உரிமை முறை பற்றிய தகவலை வெளியிட்டது. வங்கிக் கிளைகள் / அலுவலகங்கள் அமைந்துள்ள மையங்களின் மக்கள் குழு வகைப்பாடு 2011 கணக்கெடுப்பு அடிப்படையில் அமைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் 1934 ன் இரண்டாம் அட்டவணையில் பிப்ரவரி மாதம் 2017 ல் சேர்க்கப்பட்ட இரண்டு சிறிய நிதி வங்கிகள் (SFBs) இந்த புள்ளி விவர(தரவு) வெளியீட்டில்
சேர்க்கப்பட்டிருக்கின்றன.
சிறப்பம்சங்கள்:
1. அனைத்து வைப்புத்தொகைகளிலும் மற்றும் அனைத்து மக்கள் குழுக்களின் / உள்நாட்டு வங்கிக் குழுக்களின் மொத்த வைப்புத்தொகையில் குடும்பங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. தனியார் கார்ப்பரேட் துறையானது தனது பெரும்பகுதி வைப்புத்தொகைகளை வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ளது.
2. கடந்த காலங்கள் போலல்லாமல், தனிநபர்களின் கூடுதல் வைப்புகளில் மூன்றில் இரு பங்கு சேமிப்பு, சேமிப்பு வைப்புகளிலேயே இருந்தன.
3. குடும்பங்கள் மற்றும் அரசாங்க துறைகளின் பங்கு கூடுதல் வைப்புகளுக்கு முழுமையாக உள்ளது. ஆனால், நிதி மற்றும் வெளிநாட்டுத் துறையின் பங்களிப்பு குறைந்து விட்டது.
4. இந்த வருடத்தில் வெளிநாட்டு வங்கிகளில் இருந்து வெளிநாட்டு வாழ் மக்களின்
வைப்புத்தொகை வெளியேறி உள்ளது.
5. மகாராஷ்டிரா (20.4%) வங்கி வைப்புகளின் பங்கில் முதலிடம் வகிக்க, தேசிய தலைநகரப் பிரதேசம் (NCT) டெல்லி (10%) அதனைப் பின் தொடர்கிறது.
6. குடும்பங்களின் கூடுதல் வைப்புத்தொகைகளை 2016-17 ஆகிய ஆண்டுகளில் உத்தரபிரதேசம் அதிகபட்சமாக 12.7% வைத்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. பின்னர் தொடர்பவை மகாராஷ்டிரா (9.5%), மேற்கு வங்காளம் (8.0%), குஜராத் (7.1%) முதலியன ஆகும்.
மார்ச் 31, 2017 அன்று வைப்பு கணக்குகள், நிறுவன துறைகள், மக்கள் குழுக்கள் மற்றும் வங்கிக் குழுக்களின் பரந்த போக்குகளை பகுப்பாய்வு செய்யும் ஒரு விரிவான கட்டுரை, ஆர்.பி.ஐ. புல்லட்டினில் வெளியிடப்படும்.
அனிருதா டி. ஜாதவ்
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/1693 |