மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டவர் - இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது |
ஜனவரி 20, 2018
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டவர் -
இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது
தேவாஸ் அச்சகத்தில் உள்ள நாணய அச்சிடும் அச்சைத் திருடியதாக, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரால் (CISF), ஒரு இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டதாக செய்தி ஊடகத்தின் ஒரு பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி நோட்டுகள் பிரஸ் (BNP), தேவாஸ், செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் ஒரு பிரிவு ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை. மேலும், பி.என்.பி, தேவாஸில் எந்தவொரு அதிகாரிகயையும் இந்திய ரிசர்வ் வங்கி நியமித்திருக்க வில்லை. எனவே, அறிக்கைகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல.
செய்தி அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்க்கவில்லை என்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது.
(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/1991 |
|