பிப்ரவரி 08, 2018
இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் உள்ள போலியான
இணையதளங்களைப் பற்றி இந்திய ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை
URL www.indiareserveban.org என்று தெரியாத நபர்களினால் இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் போலியான இணையதளங்கள் உருவாக்கப்பட்டிருப்பது பற்றி இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரியவந்துள்ளது. இந்தப் போலியான இணையதளத்தின் அமைப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் உண்மையான இணையதள அமைப்பைப் போலவே உள்ளது. போலி இணையதளத்தின் முகப்புப் பக்கமும் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் இரகசிய வங்கியியல் விவரங்களை பெற்றுக்கொள்வதற்கான மோசடி நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட "ஆன்லைன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கி சரிபார்ப்பு" வசதியும் ஒரே விதிமுறையுடன் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் மத்திய வங்கியாக இருப்பதால், அது தனிநபர்களுக்கான கணக்குகளை வைத்திருக்கவில்லை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கேட்பதில்லை. இத்தகைய இணையதளங்களில் ஆன்லைனில் பதிலளிக்கும் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது, அவை முக்கியமான தனிப்பட்ட தகவலை துஷ்பிரயோகம் செய்து சமரசம் செய்யவோ , அதன் மூலம் அவை நிதி மற்றும் பிற இழப்புகளுக்கு காரணமாகவோ இருக்கலாம்.
மேலும், www.rbi.org., www.rbi.in போன்ற இணையதளங்களைப் பற்றியும் இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறது. இந்த URL-கள் ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்திற்கு ஒத்ததாக தோன்றலாம். எனினும், இந்த இணையதளங்களுடன் ரிசர்வ் வங்கிக்கு எந்த தொடர்பும் இல்லை. இத்தகைய இணையதளங்களில் எந்தவொரு தகவலையும் கேட்கும்போதும் அல்லது கொடுக்கும்போதும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2166
தொடர்புடைய பத்திரிக்கை வெளியீடுகள் / அறிவிப்புகள் |
ஏப்ரல் 11, 2015 |
"அனைத்து வங்கி இருப்பு விசாரணை" செயலி பற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை |
ஜனவரி 01, 2015 |
மல்டி லெவல் மார்க்கெட்டிங் செயல்பாடுகள் பற்றி இந்திய ரிசர்வ் வங்கியின் பொதுமக்களுக்கான எச்சரிக்கை |
நவம்பர் 21, 2014 |
இந்திய ரிசர்வ் வங்கி, தனது பெயரில் கடன் அட்டை – இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் நடந்திருக்கும் மற்றுமொரு புதிய மோசடி பற்றி எச்சரிக்கிறது |
மே 26, 2014 |
இந்திய ரிசர்வ் வங்கி, தனது பெயரில் உள்ள போலியான இணையதளங்களைப் பற்றி எச்சரிக்கிறது |
அக்டோபர் 15, 2012 |
இந்திய ரிசர்வ் வங்கி, தனது பெயரில் அனுப்பிய ஃபிஷிங் மெயிலுக்கு பொதுமக்கள் பதில் அளிக்காமல் இருக்குமாறு எச்சரிக்கிறது |
செப்டம்பர் 14, 2012 |
உங்கள் இணையதள வங்கிக் கணக்கு விவரங்களை கேட்கும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்காதீர்கள் – இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரிக்கிறது |
மே 21, 2012 |
இந்திய ரிசர்வ் வங்கி, ஃபிஷிங் மெயில் பற்றி எச்சரிக்கிறது |
பிப்ரவரி 06, 2012 |
பொய்யான சலுகைகள் பற்றி, பொதுமக்களுக்கு மீண்டும் மீண்டும் இந்திய ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை |
ஏப்ரல் 05, 2011 |
உங்கள் வங்கி கணக்கு விவரங்களை, இந்திய ரிசர்வ் வங்கி ஒருபோதும் உங்களிடம் கேட்காது |
பிப்ரவரி 15, 2011 |
வெளிநாடுகளில் இருந்து பெரிய நிதியைப் பெறுவதற்கு பணம் அளிக்கவேண்டாம் – இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனை |
மே 28, 2010 |
நிதி பரிமாற்றத்தின் பொய்யான சலுகைகளுக்கு இரையாகாதீர்கள் – இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனை |
மே 26, 2010 |
லாட்டரி, பணச் சுழற்சி திட்டங்கள், மலிவான நிதியைப் பற்றிய பிற பொய்யான சலுகைகள் போன்றவற்றில் கலந்துகொள்ள வேண்டாம் |
ஜூலை 30, 2009 |
பொய்யான சலுகைகள் / லாட்டரியில் வெற்றிகள் / மலிவான நிதியை வழங்குகிறது போன்றவற்றில் ஜாக்கிரதை – இந்திய ரிசர்வ் வங்கி |
டிசம்பர் 07, 2007 |
வெளிநாடுகளிலிருந்து மலிவான நிதியைப் பெறுவதற்கான பொய்யான சலுகைகளுக்கு எதிரான இந்திய ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை |
|