ஜூலை 04, 2018
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள பிரம்மவர்ட் வணிக கூட்டுறவு வங்கி லிமிடெட் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஜூலை 03,2018 ஆம் தேதி வர்த்தகம் முடிவுற்றதில் இருந்து, வங்கி வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள பிரம்மவர்ட் வணிக கூட்டுறவு வங்கி லிமிடெட் உரிமத்தை ஜூன் 26, 2018 தேதியிட்ட உத்தரவின் படி, ரத்து செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு வங்கியை மூட உத்தரவு பிறப்பிக்கவும், வங்கிக்கு ஒரு லிக்விடேட்டரை நியமிக்கவும் கோரப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதற்கான காரணங்கள்:
i. வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் லாபம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லை. இது 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 11 (1) மற்றும் பிரிவு 22 (3) (d) களை பூர்த்தி செய்யவில்லை.
ii. வங்கியின் தற்போதைய மற்றும் எதிர்கால வைப்புத்தொகையாளர்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் முழுமையாக செலுத்த கூடிய நிலையில் வங்கி இல்லை. அதனால் வங்கியியல் ஒழுங்குமுறை சட்ட்ம், 1949 பிரிவு 22(3) (a) உடன்இணைந்த பிரிவு 56 ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையை வங்கி பூர்த்தி செய்யவில்லை.
iii வங்கியின் வர்த்தகம் தற்போதைய மற்றும் எதிர்கால வைப்புத்தொகையாளர்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடத்தப்படுகின்றது. இதனால் வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949த்தின் பிரிவு 56 உடன் இனைந்த பிரிவு 22 (3) (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையை வங்கி பூர்த்தி செய்யவில்லை.
iv நியாயமான நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட்ட போதிலும், வங்கி தனது நிதி நிலையை மேம்படுத்துவதற்கு எந்தவிதமான தீவிர முயற்சியை எடுக்கவில்லை என்றும், தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என்பதும், மார்ச் 31, 2014, மார்ச் 31, 2015, மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 நிதி நிலைகளின் படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது தெரியவந்துள்ளது. வங்கியின் தற்போதைய நிதி நிலைமையை காணும்போது முன்னேற்றத்திற்க்கு எந்த வாய்ப்பும் இல்லை எனத் தெரிகிறது. எனவே, சட்டத்தின் 22 (3) (c) பிரிவில் குறிப்பிட்ப்பட்டுள்ள நிபந்தனைகளை வங்கி பூர்த்தி செய்யவில்லை.
(5). சட்டத்தின் பிரிவு 22 (3) (c) இல் திட்டமிடப்பட்டுள்ளபடி வங்கியைத் தொடர அனுமதிப்பதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் இல்லை. மாறாக, வங்கி தனது வங்கித் தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதித்தால் பொது நலன் மோசமாக பாதிக்கப்படும்.
அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக, உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள பிரம்மவர்ட் வணிக கூட்டுறவு வங்கி லிமிடெட், ‘வங்கி’ வர்த்தகத்தை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 56 தடை செய்யப்பட்டுள்ள உடன் இனைந்த பிரிவு 5 (b) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது மற்றும் வைப்புத் தொகையை திருப்பிச் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.
உரிமம் ரத்து செய்யப்பட்டு, கலைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படுவதால், DICGC-டி.ஜ.சி.ஜி.சி. சட்டம், 1961 ன் படி, பிரம்மாவார்ட் வணிக கூட்டுறவு வங்கி லிமிடெட், கான்பூர், உத்தரபிரதேசத்தின் வைப்புத்தொகையாளார்களுக்கு பணத்தை திருப்பிச்செலுத்த வசதி ஏற்படுத்தப்படும். கலைக்கப்படுவதால் ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் வழக்கமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திலிருந்து (டி.ஜ.சி.ஜி.சி) இருந்து 1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே) பண உச்சவரம்பு வரை அவள் / அவர் வைப்புகளை திருப்பிபெற உரிமை உண்டு.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/25 |